உள்ளடக்கத்துக்குச் செல்

முதற்பக்கக் கட்டுரைகள்

துக்ளக் அரசமரபு என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும். தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320-ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330, 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்தக் குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

இன்றைய நாளில்...

சூலை 24:

திருச்சி லோகநாதன் (பி. 1924· ஐ. எக்ஸ். பெரைரா (இ. 1951· ஸ்ரீவித்யா (பி. 1953)
அண்மைய நாட்கள்: சூலை 23 சூலை 25 சூலை 26

செய்திகளில்

உங்களுக்குத் தெரியுமா?

  • துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
  • இந்தியாவிலேயே கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் தான் பணியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றுவதற்கான உரிமை சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • மீனா நாராயணன் (படம்) தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் ஆவார்.
  • இறகுப் பந்தாட்ட விளையாட்டின் ஆங்கிலப் பெயரான Badminton என்பது இங்கிலாந்தில் உள்ள Badminton மாளிகை என்னும் இடத்தின் காரணமாக அப்பெயரைப் பெற்றது.
  • மறைந்த திருத்தந்தை பிரான்சிசு தான் கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து தெரிவான முதல் திருத்தந்தை ஆவார்.

தொகுப்பு

பங்களிப்பாளர் அறிமுகம்

கி. மூர்த்தி, தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். வேதியியல் பட்டதாரி. தமிழக அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிகிறார். மொழியார்வம் மிக்க இவர் விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். வேதியியல் தொடர்பான கட்டுரைகளில் முதன்மையாகப் பங்களித்து வரும் இவர், தமிழ், சதுரங்கம், வானியல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதிவருகின்றார். அசிட்டிக் நீரிலி, விக்டர் மேயர் உபகரணம், காலவரிசையில் வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு, யானைப் பற்பசை, மதராசியக் கலாச்சாரம், பெங்கோ திறப்பு, ஓயாமல் முற்றுகை, இந்திய விண்மீன் குழாம் போன்றவை இவர் பங்களித்துள்ள கட்டுரைகளில் சிலவாகும்.

சிறப்புப் படம்

கரவாஜியோ வரைந்த நார்சீசசு ஓவியம் (அண். 1597–1599). தன் பிம்பத்தின் மீது காதல் கொண்டு தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருக்கும் நார்சிசசைச் சித்தரிக்கிறது.

ஓவியர்: கரவாஜியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=4296496" இலிருந்து மீள்விக்கப்பட்டது